










பூநகரிப் பிரதேசத்தில் கிரஞ்சி என்ற பகுதி மீது இன்று வெள்ளிக்கிழமை காலை 9:00 மணியளவில் சிறிலங்கா வான்படையினர் வான்குண்டுத் தாக்குதலை நடத்தினர்.
இதில் 8 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சிறிலங்கா வான்படையின் இந்த அகோரத் தாக்குதலால் அப்பகுதியில் இயங்கி வந்த அரசாங்கத்தின் தமிழ்ப் பாடசாலைச் சிறார்கள் அலறியடித்துக் கொண்டு வகுப்புகளை விட்டு வெளியேறி ஓடினர்.
இத் தாக்குதலில் படுகாயமடைந்த பொதுமக்கள் கிளிநொச்சி பொதுமருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொயவருகின்றது.
குண்டுத்தாக்குதலில் கொட்டப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர்.
படுகொலை செய்யப்பட்டவர்களின் விபரம் வருமாறு:
1. கதிர்வேலு திருநீலகண்டன் (வயது 79)
2. கிராஞ்சியைச் சேர்ந்த ஆசிரியரான சிவாநந்தி (வயது 27)
3. விஜயகுமார் விதுயா (வயது 09)
4. இந்திரன் லதா
5. தமிழரசன் சுமதி (வயது 30)
6. சசிகரன் கவிதநாயகி (வயது 34)
7. சசிகரன் காதீபன் (வயது 04)
8. சசிகரன் தமிழ்வேந்தன் (வயது 06)
-------------------------------------------------------