வெள்ளி, 22 பிப்ரவரி, 2008

பூநகரி கிராஞ்சிப்படுகொலை















கிளிநொச்சி மாவட்டம் பூநகரிப் பகுதியில் சிறிலங்கா வான்படை இன்று நடத்திய வான்குண்டுத் தாக்குதலில் 8 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


பூநகரிப் பிரதேசத்தில் கிரஞ்சி என்ற பகுதி மீது இன்று வெள்ளிக்கிழமை காலை 9:00 மணியளவில் சிறிலங்கா வான்படையினர் வான்குண்டுத் தாக்குதலை நடத்தினர்.

இதில் 8 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சிறிலங்கா வான்படையின் இந்த அகோரத் தாக்குதலால் அப்பகுதியில் இயங்கி வந்த அரசாங்கத்தின் தமிழ்ப் பாடசாலைச் சிறார்கள் அலறியடித்துக் கொண்டு வகுப்புகளை விட்டு வெளியேறி ஓடினர்.

இத் தாக்குதலில் படுகாயமடைந்த பொதுமக்கள் கிளிநொச்சி பொதுமருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொயவருகின்றது.

குண்டுத்தாக்குதலில் கொட்டப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர்.


படுகொலை செய்யப்பட்டவர்களின் விபரம் வருமாறு:

1. கதிர்வேலு திருநீலகண்டன் (வயது 79)
2. கிராஞ்சியைச் சேர்ந்த ஆசிரியரான சிவாநந்தி (வயது 27)
3. விஜயகுமார் விதுயா (வயது 09)
4. இந்திரன் லதா
5. தமிழரசன் சுமதி (வயது 30)
6. சசிகரன் கவிதநாயகி (வயது 34)
7. சசிகரன் காதீபன் (வயது 04)
8. சசிகரன் தமிழ்வேந்தன் (வயது 06)
----------------------------------------------------------------
இந்த தாக்குதல் புலிகளின் கடல்படைமுகாம்மீது தாக்கப்பட்டதாக இராணுவப்பேச்சாளரர் உதயநாணயக்கார கூறுகிறார். கொல்லப்பட்டவர்கள் புலிகள் அமைப்புடன் சம்பந்தப்படடடவர;களாக இருக்கலாம் எனவும் குழந்தைகள் வேறு வழியில் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் இந்த ஒளிப்படங்களில் உன்மையில்லை எனவும் சொல்லுகிறார்.
-------------------------------------------------------
நன்றி:(செய்தியும் படமும்)தமிழ்விசன்

செவ்வாய், 5 பிப்ரவரி, 2008

பறவைகளே வேட்டையாடின

05.०२.2008,
செவ்வாய்கிழமை,
கிளிநொச்சி கனேசபுரம் விமானத்தாக்குதல்....
---------------------------------------------------------


வழிநெடுக அழிக்கப்பட்ட
கிராமத்தின் ஊமைத்துயரம்
கொட்டிக்கொண்டே போனது
துயரத்தை மணந்து கிராமமம்
அதை தூக்கியபடி பறவையும்
அடைபட்டுக்கொண்டிருந்தது
-----------------------------------------------------------------------------


இனி எல்லோரும் ஊமைகள்

நிலங்களுக்காகவே
கொடுமைக்காட்சிகளைபேசியபடி
நிறம் பூசியது பறவையின்
ஊனமடைந்த கைகள்

-----------------------------------------------------------------------------


அந்தப்பறவை
இன்னும் வட்டமிட்டு
கோரத்தை சுமந்து
எங்கள் திசைகள்மீது
சிறகுகளை அடித்தது

-----------------------------------------------------------------------------


அதன்குணம் வீடுகளைச்சூழ
விசம்பரப்பும்
பார்வையை ஆழவிட்டு
மரங்களை அசைத்துதின்றது

-----------------------------------------------------------------------------


பறவைகளே வேட்டையாடின
அதுவும்
மனிதர்களை சப்பியபடி
வீடுகளை காவிக்கொண்டு
கிராமத்தை பிரளயம்நோக்கிக்கொண்டுபோனது

-----------------------------------------------------------------------------


சுவரில் மோதி
அடிபட்டு விழுந்தது பறவையும் கிராமமும்
சுவரடியில்
கிராமம் சிதறிக்கொட்டியது

அந்தப்பறவைக்குப்பிறகு

-----------------------------------------------------------------------------



கோழிகள்கூட குஞ்சுகளுக்கு
பருந்தாயின
குஞ்சுகளும் பருந்தாகின
சிறகுகளை மணந்து
உணர்ந்துகொள்ளமுடியவில்லை?

-----------------------------------------------------------------------------

சிறகுகள் பயங்கரம்கலந்து புயலாகின

மீண்டும் அந்தப்பறவை
நிறம் பூசிவரும்
நினைவிலிருக்கிறது
அந்தப்பறவையின் பயங்கரமான சிறகுகளும்
அது நிலத்தில் விழுத்தும் வட்டமும்
கொடூரம் தாங்கியசொண்டும்

--------------தீபச்செல்வன்--------------
----------------------------------------------
 
Copyright 2009 ஒளி தீபம். Powered by Blogger Blogger Templates create by Deluxe Templates. WP by Masterplan