துடிக்கிறது.
----------------------------------------------------------
மன்னாரின் காடுகளின்
குழிகளில்
இரத்தம் ஊறிய
புத்தகங்கள்
நிரம்பியுள்ளன.
----------------------------------------------------
சிலுவையின் மணி
அறுந்து வீழ்கிறது.
--------------------------------------------------
சனங்களின் மாதாவின்
இரத்த வாக்குமூலங்கள்
யாருக்குக் கேட்கப்போகிறது.
--------------------------------------------------

29.01.2008 செவ்வாய்க்கிழமை
மன்னார் மடுவில் இலங்கை இராணுவம் பள்ளிப்பேரூந்துமீது ஆழஊடுறுவி நடத்திய கிளைமோர் தாக்குதலில் 11 பள்ளி மாணவர்கள் உட்பட 20பேர் பலியாகியுள்ளனர்.
-------------------------------------------------------------------------------------------05.02.2008
இந்த தாக்குதல் இடம் பெற்று இரண்டொரு நாட்களுக்குபிற இராணுவப்பேச்சாளர் பிரிக்கேடியர் உயதநாணயக்கார இந்ததாக்குதலை தாங்களே நடத்தியதை ஒப்புக்கொள்கிறார் ஆனால் இது பயங்கரவாதிகள் பயணம் செய்த பேருந்து என்று கூறும் அவர் கொல்லப்பட்டது பயங்கரவாதிச்சிறார்கள் என்பது போல கூறுகிறார். முதலில் இந்த தாக்குதலுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று உதயநாணயக்கார கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
---------------------------