யாழ்.பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் இவர்கள். பக்கத்திலிருக்கும் சேரிக்குடியிருப்பு என்று ஒதுக்கப்பட்ட பகுதியில் இவர்கள் வசிக்கிறார்கள். இடப்பெயர்வு, கல்வி வசதியின்மை, பொருளாதார நெருக்கடி, சமூக ஒடுக்கல் போன்றவற்றினால் அவர்களின் காலம் கேள்வியாகியிருக்கிறது.
கிளிநொச்சி மாவட்டம் பூநகரிப் பகுதியில் சிறிலங்கா வான்படை இன்று நடத்திய வான்குண்டுத் தாக்குதலில் 8 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பூநகரிப் பிரதேசத்தில் கிரஞ்சி என்ற பகுதி மீது இன்று வெள்ளிக்கிழமை காலை 9:00 மணியளவில் சிறிலங்கா வான்படையினர் வான்குண்டுத் தாக்குதலை நடத்தினர்.
இதில் 8 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சிறிலங்கா வான்படையின் இந்த அகோரத் தாக்குதலால் அப்பகுதியில் இயங்கி வந்த அரசாங்கத்தின் தமிழ்ப் பாடசாலைச் சிறார்கள் அலறியடித்துக் கொண்டு வகுப்புகளை விட்டு வெளியேறி ஓடினர்.
இத் தாக்குதலில் படுகாயமடைந்த பொதுமக்கள் கிளிநொச்சி பொதுமருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொயவருகின்றது.
குண்டுத்தாக்குதலில் கொட்டப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர்.
இந்த தாக்குதல் புலிகளின் கடல்படைமுகாம்மீது தாக்கப்பட்டதாக இராணுவப்பேச்சாளரர் உதயநாணயக்கார கூறுகிறார். கொல்லப்பட்டவர்கள் புலிகள் அமைப்புடன் சம்பந்தப்படடடவர;களாக இருக்கலாம் எனவும் குழந்தைகள் வேறு வழியில் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் இந்த ஒளிப்படங்களில் உன்மையில்லை எனவும் சொல்லுகிறார். -------------------------------------------------------