சனி, 6 ஏப்ரல், 2024
புதன், 27 மார்ச், 2024
திங்கள், 12 பிப்ரவரி, 2024
வியாழன், 29 ஜூன், 2023
சர்வதேச நாவல் | கபிலேசன் கமலதாசன்
நன்றி Kapilesan Kamalathasan
நாவலை வரலாறாகப் படிக்கும் போது மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விடுகிறது! நம்மினம் பட்ட துன்பங்கள் பல, அவற்றில் சிலவற்றைப் படிக்கும் போது கண்கள் கடலாகிவிடுறது. பலவை எம்மை வந்தடையாமலும் நீறு பூத்துள்ளன. அதிகம் வன்னிப் பெரும்நிலப் பரப்பில் வாழாத என்னை ஒன்றுக்கு இரண்டுமுறை ஓவ்வோர் தாயகக் கதைகளையும் வாசிக்கத் தூண்டிய நாவலாசிரியருக்கு நன்றி!
இப்படித்தான் மறவர்கள் மண்ணைக் கட்டியாண்டார்கள் என்பதை இத்தருணம் எண்ணும் போது வியப்பை விடையாக மட்டுமே காண முடிகிறது. ஈழமண்ணின் சுவையுடன் வடக்குக் கிழக்கை இணைக்கும் மாபெரும் நூலாகப் “ பயங்கரவாதி” தலைநிமிர்ந்து நிற்கிறது. யாருமே சொல்லவோ அல்லது வெளிக் கொணரவோ விரும்பாத அச்சம் கொள்ளும் இரத்தம் சரித்திரத்தை தாயகத்தில் வாழ்ந்து கொண்டே போட்டு உடைத்து, தீரம் என்றே கூற வேண்டும்!
“பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும். “இக்குறள் ஆசிரியருக்குச் சாலப் பொருந்தும். எம்மண்ணின் வாய்மையின் முத்து என்றே கூறிடத் துடிக்கிறது நெஞ்சம். சில நேரங்களில் என்னையறியாமல் கண்கள் கூசி மனம் நெகிழும் போது நூலைப் படிக்காமல் சிந்தனையில் ஆழ்ந்துவிடுவேன். அதனால் என்னவோ சில நாட்களாக என் தூக்கத்தைக் கெடுக்கும் அளவிற்கு நாவலில் இடம்பெற்ற சில விடயங்கள் வந்து வந்து தாக்கத்தைத் தருகின்றது. ஏனேனில் நானும் 2006 இல் யாழ் மண்ணில் தான் வாழ்தேன்! சில நண்பர்கள் இடப்பெயர்வால் துழைத்தேன். யாரையும் சாடாமல் நம்மினத்தின் துரோகத்தை சரிவர உத்தி அமைப்புடன் கொண்டு சென்று, அழகுபட துரோகத்தின் வீரியம் எதை நடத்துமோ அதைக் கூறி முடித்துள்ளது இந்நாவல்!
சர்வதேசம் திரும்பும் வண்ணம் காட்டிய பெரும் படைப்பு என்றே கூற வேண்டும். அட்டைப்படம் என்னைக் கவர்ந்து, அதிலும் நாவலை வாசித்து முடித்த தருணத்தில் உணர்ந்தேன், சிந்தைக்கு விருந்தளிக்கும் அத்தனை பொருத்தங்களையும் இந்த நாவலின் முகப்புப் பெற்றுள்ளது என்று !
உண்மையாக ஏதோ ஓர் இடத்தில் இன்பியல் முடிவு உள்ளதா என்று நோக்கினால், இல்லை! வாழ்வியல் தத்துவம் இன்பம் , துன்பம் கலந்தது வாழ்வு எனக் கூறுகிறது. ஆனால் ஈழத்தின் மூத்த குடிகள், ஏன் தான் துயரம், துரோகம், ஒற்றுமையீன்மை, அவமதிப்பு என உளழ்கிறது என்ற கேள்விக்கு மட்டும் எனக்கு விடை தெரியவில்லை! ஒன்று மட்டும் நிதர்சனம் தம் உயிரைத் தந்து நம் வாழ்வில் விடியல் தேட எண்ணி ஆகுதியாகிய வீரரின் கனவும் நாம் அனைவரும் கல்வி என்ற பெரும் சொத்தைக் காண வேண்டும் என்பதே !
தீதும் நன்றும் பிறர் தர வாரா!
~ கபி